Saturday, 17 May 2014

எச்சில்



 தோழியின் 
காக்கா கடியில் 
மிட்டாய் 
இன்னும் தித்திக்கிறது.

எச்சில் பட பட 
ஊறுகிறது
அம்மாவின் 
முலைப்பால்.

அப்பாவின் 
எச்சில் மிச்சம்
நான்.

எச்சில் தடவி 
ஒட்டிக்கொள்கின்றனர் 
இல்லறத்தில் தம்பதி!


எச்சில் கையில்
பேரன் ஊட்டும்
ஒரு வாய் சோற்றில்
நிரம்புகிறது
தாத்தாவின் வயிறு.

எதிர் வீட்டு குழந்தையின்
பறக்கும் முத்த எச்சிலில்
குளிக்கும் காற்று.

மொத்தத்தில்
நான்கில் மூன்றாய்
எச்சிலில் சுழல்கிறது
உலகம்.

எச்சிலின்றி
அமையாது அன்பு!

-எம்.ஸ்டாலின் சரவணன்,கரம்பக்குடி 

23 comments:

  1. மிகச்சிறந்த கவிதை. வருக வலைப்பக்கத்தில் தங்கள் படைப்புகளைத் தருக. நன்றி

    ReplyDelete
  2. நல்ல கவிதை.வலைப்பூ உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆருமை ஆருமை. வலைப்பக்கத்தில் நல்வரவு

    ReplyDelete
  4. அருமை சகோ.வாழ்த்துக்கள்
    உங்கள் புதிய வலைபூதளம் உலகெங்கும் மணம் பரப்பட்டும்...

    ReplyDelete
  5. வாழ்த்த்துக்கள் நண்பா தங்களின் கவிதை தொகுப்பினை நானும் தினமும் பகிர்ந்துகொள்கிறேன்

    ReplyDelete
  6. ரசிக்கும்படியான கவிதை. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogpot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரர். தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்ற்

    ReplyDelete
  8. வலைச்சரம் பார்த்துதான் வந்தேன் சகோ! அருமையான தொடக்கம் சகோ! வாழ்த்துகள்:)

    ReplyDelete
  9. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகப்படுத்தியவர்-மகிழ்நிறை மைத்திலி கஸ்தூரிரெங்கன்


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    என்பக்கம் கவிதையாக

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. எச்சில் மகிமை பற்றிய கவிதை அருமை.

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  12. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

    நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete
  13. //வெளியிட அல்ல சகோ//

    உங்களை புதுக்கோட்டையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..சிறிது நேரமே ஆனாலும் நன்கு பேசினீர்கள். உங்கள் அன்பிற்கும் புத்தகத்திற்கும் உளமார்ந்த நன்றி ..படித்துவிட்டு என் கருத்துகளைச் சொல்வேன்.

    ReplyDelete